
63வது இணையகாலக் கவியரங்கம்
.
இறந்து விட்டார் என்பதற்கும்
இறந்து கிடந்தார் என்பதற்குமிடையேயான
பெரும் வித்தியாசத்தை
எளிதாகக் கடந்து விட முடியாமல்
கேள்விப்படும் போதெல்லாம்
தவிப்பின் எல்லையில் நின்று
அமைதி தேடி அலைகையில்
கோயிலின் முன் அமர்ந்து
இறைஞ்சி நீளும் தட்டுகளில்
கூடுதல் சில்லறையைப் போட்டு விட்டு
தப்பிப் பிழைக்க விழைகிறது மனம்.
.

இது மாதிரி சாலை சந்திப்புகளில், சிக்ன லுக்கு காத் திருக்கையில், புத்தகம் விற்கிற சிறுமியிடம் ஒரு புத்தகம் மட்டும் வாங்கி விரையும் போது, மனசு கனத்து போவது நிகழ்ந்த படியே. நுண்ணிய மனசுக்கு நுண்ணிய கவலைகள்.