இன்று இணைய வழி கவியரங்கில், நான் வாசித்த இரா. மீனாட்சியின் கவிதை கீழே .
மதுரை நாயகியே!
மீனாட்சித் தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடி வரும்
உன் மகளை
உன் மகனே ஏ
வழி வம்பு செய்கின்றான்.
கோயிலிலும் காப்பில்லை.
உன் காலத்தில் –
அழகி நீ
எப்படி உலாப் போனாய்?
( சுடு பூக்கள் – 1978 கவிதைத் தொகுப்பிலிருந்து.).
