ஹரணி/கர்த்தா இல்லாமல்..

இணையக் காலக் கவியரங்கம்
நாள் 22.12.23

ஏணிகள் உயரமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி நிற்கையில்
குள்ளமாகிவிடுகின்றன.. .

ஸ்டூல்கள் குள்ளமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி
நிற்கையில்
குள்ளமாகிவிடுகின்றன…

கோக்காலிகள் நடுத்தரமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி
நிற்கையில்
உயரமுமில்லை
குள்ளமுமில்லை..

ஏறிய வர்கள் கர்ம வினையால்
கீழே தரையில் விழுகையில்..

ஏணிகள் உயரமானவை
ஸ்டூல்கள் குள்ளமானவை
கோக்காலிகள் நடுத்தரமானவை
என்பதை உணர்கிறார்கள்..