வைதேகி/அழுகை

65வது இணையகாலக் கவியரங்கம்.


மனிதர்கள் எல்லோருக்கும்
எத்தனையோ பிரயத்தனங்களுக்குப் பிறகும்
மனத்திற்கு அணுக்கமாய் யாருமற்றிருக்கும் தருணங்கள்
எப்பொழுதாவது வாய்த்து விடத்தான் செய்கிறது.
எளிதாய் கடக்கும் வழியறியாது
அழுத்தங்களில் அமிழ்ந்து போகையில்
கரைத்து விடச் சொல்லித் தூண்டுகிறது
வெடித்துக் கிளம்பும் அழுகை.

.

One Comment on “வைதேகி/அழுகை”

Comments are closed.