சசிகலா விஸ்வநாதன்/பழியும் புகழும்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி 5-15


கவிதையின் தலைப்பு


பழியும்,புகழும்
நிழல் போல்,
நாளும்,பொழுதும் தொடரும்.
கழிந்து, அழிந்து, ஒழிந்து, விரைந்து,
புதிதாய் பிறக்கும்
உலகில்;
பிழியும் துன்பம்
தரும் பழி, என்றும்
வழி நிற்கும்.
புகழ் என்றும் வழிக்கு விளக்கிடும்.
இது புரிந்து,தெரிந்தே பழி சுமப்பதை களை.
புகழ் சேர்க்க;
அறமது புரிவாய்.
இச்சொல்லின்
பொருள் புரிய;
நலமே சேரும்.

24-12-2023