
எந்தையே என் தந்தையே
(24/12/2023)
எந்தையே என் தந்தையே
படைத்தாய் பண்புடனே வளர்த்தாய்
மேன்மை மிகு
வாழ்வு வாழ
கற்றுத் தந்தாய்,
எவ்வளவு துயரத்திலும்
துன்பத்திலும் துவளாததிருக்கப்
பாடம் சொல்லித் தந்தாய்
இன்முகம் காட்டி
சிரிக்க வைத்தாய்.
எந்நேரமும் இயங்க வைத்தாய்
எதனோடும் இணங்க வைத்தாய்
கண்ணுக்குக் கண்ணாக நானிருக்கக்
கண்ணையே தந்தாய் நீ
புவிதனில் பொறுப்பும் தந்தாய்
வாழும் வாழ்வு
போதுமென்று அறுபதுதனில்
மாண்டு போனாய்
என்ன அவசரமோ
விரைந்தது போனாய்?
நேற்றோடு பதினோரு ஒன்பது (99) வயது
முடிந்து இன்று நூறு வயதில்
கால் வைக்கிறாய், ஆசிகள்
எதிர்நோக்கி கவிதை யாத்தேன்.
#
(என் தந்தை, பிறந்த தினம் 24/12/1924, 1986ல் மரணமடைந்தார், நேற்றோடு 99 வயது முடிகிறது, இன்று முதல் 100 வயது தொடங்குகிறது, அது குறித்து எழுதப்பட்ட கவிதை)
சிட்லபாக்கம்
24/12/2023
