25.12.2023 – திங்கட் கிழமை
ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்கள் தயாரிக்க வில்லையா?
அழகியசிங்கரவந்து விட்டது. சனிக்கிழமை மட்டும் 3 புத்தகங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டேன். இந்த ஆண்டு 5 புதிய புத்தகங்கள் வராமலிருக்காது.
ஜெகன் : என்னன்ன புத்தகங்கள்.
மோகினி : சொல்லாமல் ஆச்சரியப்படும்படி கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறீர்களா?
அழகியசிங்கர் : அப்படியொன்றுமில்லை. க.நா.சு. லாசரா, நகுலன் புத்தகங்கள் தவிர நான் தயாரித்த இரண்டு புத்தகங்கள்.
மோகினி : எந்தப் புத்தகம் சிறந்த புத்தகமாக அமையப் போகிறது?
அழகியசிங்கர் : க.நா.சு கவிதைகள்.
ஜெகன் : அதில் என்ன விசேஷம்?
அழகியசிங்கர் : ஞானரதம் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகளையும் சேர்த்திருக்கிறேன்.
மோகினி : அப்பச் சிறப்பாகத்தான் இருக்கும்.
அழகியசிங்கர் : க.நா.சு கவிதைகள் 100 கவிதைகள் கண்டெடுத்திருக்கிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(இரவு 10.30 மணிக்கு)
