ரேவதி ராமச்சந்திரன்/பரமதிருப்தி

66 ஆவது இணைய கால கவியரங்கம்


வீட்டின் மூலையில் அம்மா
மெதுவே சொன்னாள் இன்று
சிறிது அல்வா சாப்பிட ஆசை
பையன் திட்டி மருமகள் கோபித்து
ஆசைப்பட்ட மனத்தை அடக்கி வை
கடைசி வரை அல்வா கையில் வரவில்லை இன்று அம்மாவின் 13 வது தினம்
உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்து பையன் எல்லாவற்றையும் முறையாக செய்தான்
கேரட் அல்வா பயறு அல்வா ரசகுல்லா குலாப்ஜாமுன்
நான்கு விதமான இனிப்புகள்
நாக்கிற்கு ருசியாக சாப்பிட்ட எல்லோரும் புகழ்ந்தனர் சொர்க்கத்தில் உள்ள அம்மாவின் ஆத்மாவும் ஒருவேளை இதனால் திருப்தி அடைந்திருக்கும்!

One Comment on “ரேவதி ராமச்சந்திரன்/பரமதிருப்தி”

Comments are closed.