
இன்றைய இணையவழிக் கவியரங்கில் வாசித்தது.
கேகயன் மகளின் சொல்
தசரதனை
வானகம் அனுப்பியது.
குந்தி தேவியின் சொல்
துருபதன்
மகளை ஐவரின் மாலை
வாங்க வைத்தது.
காந்தி மகானின் சத்தியச்
சொல்
மீட்டது விடுதலை.
வினோபாவின் சொல் சம்பல்
கொள்ளையர்
மனம் மாற்றியது.
பாரதியின் சொல்லோ
தேடியது
வழி சமூக மலர்ச்சிக்கு.
அன்பால் அகிலம் வளையும்.
மிருகமும்
சொல் கேட்டிடப் பழகும்.
பொய்க் கோபம் கொண்ட
வேளை
மலர்க்கணை ஆகும் சொல்.
மனம் உடைத்து உயிர்
வாங்குவது
தணலில் வறுத்து கொதி
நீரில்
தோய்த்தெடுத்த சொல்.
நாவில் நயம் சேர்ந்தால்
ஊரும்
உறவும் விட்டுப் போகுமா ?.
