
(1)
கைக்குள் தட்டும் போதே வாசமிருக்கும்
எண்ணெய்யில் விழ நாக்குத் தவிக்கும்
முதல்வடை யாருக்கெனக் காத்திருப்பு எகிறும்
நாக்கு தாலாட்டும் வடையை.
(2)
அப்பாதான் அறிமுகம் செய்தார் மசால்வடை
புட்டுப்பிளக்கப் புகை தப்பியோடும் சுவையல்ல
இரண்டு தின்றும் ஏக்கம் பசியாறாது
நாளைக்கும் என்பார் அப்பா.
(3)
மசால்வடை எந்த அளவுக்குப் பிடிக்கும்
அடிக்கடிச் சொல்வேன் அருவருப்பு இல்லை
நோய்க்குறை உள்ளோர் கொடுப்பினும் பிடிக்கும்
மசால்வடை எலிதான் நான்.
(4)
முறுக்கு மீசை துருவல் போல
மசால்வடை துருத்த வேண்டும் கறிவேப்பிலையால்
ஆமைமுதுகு போல் உப்பிட வேண்டும்
கடலைப்பருப்புப் பதித்திடச் சொர்க்கம்.
(5)
பக்கோடா தூளென உடைத்து வைக்கணும்
சிவப்பு மிளகாய் சட்னியில் மூழ்கணும்
கொஞ்சம் பருப்பு மிதக்கும் சாம்பார்
மசாலவடைக்கு எதையும் தரலாம்.
