சசிகலா விஸ்வநாதன்/மசால் வடை

இன்றைய அழகிய சிங்கரின் என்பா

        ** 
                     (1)

முப்பருப்பு கூட்டி செய்யும் வடை;

முறு முறுப்பான வடை அது;

கர கர காரவடை; அதற்காக,

ஆலாய் பறப்பர் அனைவரும்.

             (2)

உடனடி மசால் வடை வேண்டுமா?

கட கடவென சிறு வெங்காயம் அருகென

திருத்தி,அடை மாவில் கலந்து,

மசால் வடை செய்.
(3)

அலுவலக அலுவல்
இடையே சிறு

நேர இடைவெளியில்
காஃபியுடன் கையில்,

காகிதத் துண்டில்
சுற்றிய சிறு

மசால் வடை; சொர்க்கம்!

         (4)

கொத்து வேலை
பார்க்கும் வேலையாட்களுக்கு,

கொத்தனார் தரும்
இந்த சிற்றுண்டியே;

மதியம் நீர் சோறுக்கும் வியஞ்சனம்;

துட்டும் மிச்சம் வள்ளியக்காவிற்கும்.

            (5)

உளுந்து வடை
சூடாக இருக்கையில்

நாவில் நீர் ஊறும் அமிர்தம்.

மசால் வடை ஆறினாலும் காட்டும்

ஒரு விண்ணக அனுபவம்.


30-12-2023