தங்கேஸ்/கடவுள் மறைந்து விட்டார்

ஒரு முறை வானம் அசைய ஆரம்பித்தது

ராட்சத சிறகு ஒன்று பட படத்தது

தலை கீழாய் ஒரு கடல்

தலையிலடித்துக்கொண்டு

ஆர்ப்பரித்தது

நட்சத்திரங்களெல்லாம் செத்து மிதக்கும் மீன்களாக

கரை ஒதுங்கி கிடந்தன

நிலவு ஒரு அரச இலை போல 

மிதந்து திரிந்தது

வெள்ளை  வெளேர்  அங்கியில் 

கடவுள் என்னும்  முதியவர்

பொங்கும் அலைகளின் மீது

வேகமாக  நடந்து வரும்போது

ஏதாவது ஒரு அதிசயம் நிகழப்போகிறது

என்று தான் யாவரும் காத்திருந்தோம்

ஆனாலும்  முதியவர்  வழக்கம் போலவே

அடங்குவது ஆடி தானகவே அடங்கட்டும்

என்று 

கிழக்கிலிருந்து மேற்காக நொடியில்

மறைந்து விட்டார்

யாவரும் திகைத்துப்போக