டி வி ராதாகிருஷ்ணன்/அறநெறிச்சாரம்

இனிக்கும் தமிழ் -192

இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம்
போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்க வேண்டும்
அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.
அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார்
சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை
எப்போது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்கிறது
அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது
கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

அதில் ஒரு பாடல்

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பொருள்
மறவுரையும் – அறம் அல்லாத உரைகளையும்
காமத் துரையும் -காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும்
மயங்கிய – குழப்பம் தரும்
பிறவுரையும் – பிற நூல்களும்
மல்கிய – நிறைந்த
ஞாலத்– இந்த உலகில்
தறவுரை -அறவுரையை
கேட்கும் -கேட்ககும்
திருவுடை யாரே – புண்ணியம் செய்தவர்களே
பிறவியை – இந்தப் பிறவியில் இருந்து
நீக்கும் – விடுபடும்
திருவுடையார் புண்ணியம் உள்ளவர்கள்

அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப்
பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள்.