
இந்த ஆண்டின்
கடைசி நாளில்
என்ன செய்துகொண்டிருக்கிறேன்?
எப்போதும்போல
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அடுத்த ஆண்டின் முதல் நாளில்
என்ன செய்வேன்?
எப்போதும்போல
எழுதிக்கொண்டிருப்பேன்
இடையில் கொஞ்சநேரம்
யார் தோளிலாவது
சாய்ந்துகொள்ளவேண்டும் போலிருக்கும்
நான் இந்தச் சுவரில்
சாய்ந்துகொள்வேன்
ஒன்றுமில்லை
அதற்குமேல்
ஒன்றுமே இல்லை
–

அருமை.