அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்/சோ.தர்மன்


எதிர் வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னுடைய நான்கு நூல்கள் வெளியாகின்றன.மூன்று நூல்கள் நான் எழுதியவை.மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு கிராமம் என்றால் என்னவென்றே தெரியாது.நம்முடைய தாத்தா பாட்டிகள் கால கிராமம் அதாவது எழுபது எண்பது வருடங்களுக்கு முந்தைய கிராமம் அதன் ஆன்மா கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அறங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.
“பெரு மூச்சு”என்கிற சிறுகதைத் தொகுப்பு இவையிரண்டும் அடையாளம் பதிப்பக வெளியீடுகள்.
“சோ.தர்மன் கவிதைகள்”என்கிற என்னுடைய முகநூல் கவிதைகளும்”சோ.தர்மனின் படைப்பும் வாழ்வும்”என்கிற என்னைப் பற்றி முனைவர்.கோ.சநதனமாரியம்மாள் அவர்கள் எழுதிய புத்தகம் இரண்டும் யாப்பு வெளியீடு.
வழக்கம் போல் அடையாளம் வெளியிடும் என் புத்தகங்களில் என் தொலைபேசி எண்,முகவரி,போட்டோ எதுவும் இருக்காது.அதேமாதிரி இதுவரை என்னுடைய எந்த நூலுக்கும் வெளியீட்டு விழா நடத்தவில்லை.நான் சிறிய அளவில் வெளியீட்டு விழா நடத்த விரும்பினாலும் என்பதிப்பாளர் அடையாளம் சாதிக் அவர்கள் சொல்கிறார்.
“அதைப்பற்றி நான்தானே கவலைப்பட வேண்டும்.உங்கள் நூல்கள் ஆப்பிரிக்காவில் வெளியிட்டாலும் விற்றுப் போகும்.பணத்த செலவழிக்க வேண்டாம்.பேசாமல் இருங்கள்”
மற்ற புத்தகங்கள் பற்றி அடுத்தடுத்து அறிமுகம் எழுதுவேன்.