
பிடித்து தான் இருக்கின்றன
புத்தாண்டு வாழ்த்துகள்
அவனிடமிருந்து வராது எனும் சந்தேகமற்ற உண்மை கசந்தாலும்
மனமுவந்து
அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன்
எல்லோருக்கும்
அவனுக்கு அனுப்பாமல்
எஞ்சியுள்ள
தன்மானத்தை
பிடித்திழுத்துக் கொண்டு
புன்சிரிப்பு அதனிடத்தில் அமர்ந்திருக்கிறது
சட்டமாக
மனது கூட பரவாயில்லை,
தேறி விட்டதாய்
காண்பித்துக் கொள்கிறது
பாழாய் போன
அடி வயிறு மட்டும்
சற்றே கலங்கி
எல்லாவற்றையும் தரைமட்டமாக்குகிறது
