மீனாட்சி சுந்தரமூர்த்தி/திறவுகோல்

இன்று மாலை வாசித்த கவிதை.

திறவுகோல்.
இடிமின்னலென இரட்டைத்
திறவுகோலிட
மழைச்சுரங்கம் மண் தொடும்.

ஆண்டு பல போனபின்
உரிமைக்குரல்
ஆனது விடுதலையின்
திறவுகோல்.

பூக்கள் புன்னகைக்க
தென்றலே
திறவுகோல்.

புதுமைகள் வையம் காண
அறிவியல்
திறவுகோல்.

வாழிய நலமென! வாழ்த்த
பிறந்த நாள்
ஆகும் மனமகிழ் நாள்.

தேனுண்டு மறந்து தாவும்
வண்டிற்கு
உதிரும் பூவே மனமாற்றத்
திறவுகோல்.

நல்லாட்சி,வளமை,நாட்டுயர்வு
பண்பாடு,
நலவாழ்வு, நீரோடும் ஆறு
காண
உழைப்பும் அன்பும்
இரட்டைத்
திறவுகோல்.