..

இருந்திருந்து கட்டங்கடைசியாய்
போயும் போயும்
அந்தப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருக்கக் கூடாது தான்
என் அரதப் பழசான
காதல் கவிதைகளை.
தூசு தட்டி தூக்கி தூரப் போடாமல்
படித்துவிட்டு பத்திரமாய் வைத்திருக்கிறார்போலும்
எப்போது கடைதாண்டிப்
போனாலும்
முதலில் கடைக்காரர் பின்
இந்த இங்கிதம் தெரியாத கவிதைகள்
இரண்டும்
சிரித்துத் தொலைக்கின்றன
6.1.20024
தாராபுரம்
