
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
பார்க்கையில் இயற்கை தரும் இதம்;
படைக்கையில் செயல் தரும் ஒரு கர்வம்;
கேட்கையில் புட்களின் கானம் தரும் ஆனந்தம்;
வேட்கையில் உயிர்ப்பு
தரும் விறுவிறுப்பு;
தொடுகையில் புது மதலை தரும் சுகம்;
முகர்கையில் அப்போதே அலர்ந்த மலர் தரும் மணம்
அறிகையில் அறிவு தரும் ஒரு ஞானம்;
இவை அனைத்தும்
அனுபவிக்க நாம்
எடுத்த பிறவி
இனிது,இனிது,இனிதே!
6-1-2024
