நாகேந்திர பாரதி/கனவான காலங்கள்

பார்த்ததும் சிரித்ததும்
பட்டதும் தொட்டதும்

தொடர்ந்ததும் துவண்டதும்
நடந்ததும் கடந்ததும்

கனவாய்ப் போன
காதற் காலங்கள்

சாலையின் விரைவிலும்
வேலையின் உழைப்பிலும்

காலையும் மாலையும்
கடந்து போக

இரவில் மட்டும்
இழுத்து வந்திடும்

இதழின் ஓரமும்
கண்ணின் ஈரமும்

கனவில் தோன்றிக்
கனவைக் கலைக்கும்

2 Comments on “நாகேந்திர பாரதி/கனவான காலங்கள்”

Comments are closed.