
இணைய கால கவியரங்கம் 81
அன்பு உணர்வில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்து செல்கிறது!
அன்பு என்னும் சொல்
காட்டிய நல்ல பாதையில்
நம்மவர் வாழ்க்கையே
ஓடிக் கொண்டேயிருக்கிறது!
மதங்களும் சாதிகளும்
அன்பு என்னும் மென்மலரை
மனதில் தாங்கிக் கொண்டுதான்
ஒற்றுமையே மலர்கிறது!
அன்பு என்னும் உணர்வு
ஓரிடத்தில் விதைத்தால்
ஓராயிரம் இடத்தில்
முளைத்துக் கொண்டே
உலகில் வலம் வரும்!
வன்முறைக்கு சமாதிகட்டும்
அன்பு என்னும் ஊற்று
அனைத்து உயிரிலும்
சுரந்து கொண்டேயிருக்கும்!
அன்பு வேறு சிவம் வேறு
ஆர்பரிப்பர் அறிவிலார்
அன்பே சிவம் அறிந்துகொண்ட
ஆன்மீக அன்பர்கள்!
உலக மக்களே
அன்பை விதையுங்கள்
அமைதி புறாக்கள் பறக்கும்
அகிலமும் சிறப்படையும்!
பள்ளிக்கரணை, சென்னை
