சுரேஷ் ராஜகோபால்/நிகழ்காலம்

சொல் புதிது, இணைய கால, 81வது கவி அரங்கம், தேதி 07.01 2024 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.15, “நிகழும் காலம்” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

நிகழும் காலம் நிகழ்காலம்
ஒரு நொடியில்
கடந்தகாலம் ஆகிவிடும்
அதைப் போய்
இறந்தகாலம் ஆக்கிவிட்டோம்
என்னே நம் அறியாமை. 1

ஒரு காலத்தில் பிறந்து
ஒரு காலத்தில் வளர்ந்து
ஒரு காலத்தில் மறைந்தும் போகும்
நம்மோடு வரும் காலம்
நம்மோடு மறையாதே இருந்தாலும்
இறந்த காலம் தானோ. 2


சிட்லபாக்கம்
07/01/2024 மாலை 05.15