
அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 81
பாடுபடும் மக்களுக்கே
பாட்டுச் சேர வேண்டும்
அவர்
ஓடாகி உழைக்கையிலே
உற்சாகம் வர வேண்டும்
அவர்
களைப்போடு படுக்கையிலே
களிப்புத் தர வேண்டும்
இதைத்
தந்தவன் ஒரு கவிஞன்
தரணி புகழ் புலவன்
அவன்
வாழ்க்கையும் திறப்பு
வசனமும் சிறப்பு
அவன்
கவிஞரின் அரசன்
எங்களின் நேசன்
அவன்
கண்ணனின் தாசன்
கண்ண தாசன்
———————-
