
சொல் புதிது, இணைய கால, 84வது கவி அரங்கம், தேதி 10.01 2024 கிழமை புதன், நேரம் மாலை 05.25 “தாராள மனசு ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது
அரிசிக் கடையில் அரிசி
மூட்டைகள் இறக்கப்பட்டன
நூறு மூட்டைகள் இறங்கியதும்
தரையைப் பெருக்கி
கூட்டி சுத்தம்
செய்தான் ஒருவன். 1
சிந்திய அரிசி மணிகளைச்
சேர்த்து குப்பையோடு தட்டில்
எடுத்து வைத்தான்,
அதனை எடுத்து பிச்சை
கேட்டு வந்தவனுக்கு
தானம் செய்தார் முதலாளி. 2
தாராள மனசு கொண்டவர்
முதலாளி, சுத்தம் செய்தவன்
தனக்கு அது கிடைக்குமென்று
எடுத்து வைத்திருக்கையில்
அது கைமாறிப் போச்சே என்ற
ஏக்கத்தோடு பார்த்தான். 3
சுரேஷ் ராஜகோபால்
சிட்லபாக்கம்
10 01 2024 மாலை 05.25
“

அரிசிக்கடையில் நாங்கள் அரிசி வாங்குவதோடு சரி; உங்களைப்போல் தரையில் விழும் அரிசி என்னாவாகிறதென்று ஒருநாளும் பார்த்ததில்லை. தங்கள் சமூகப் பார்வை விசேஷமானது!
சிறப்பான கவிதை
லாவண்யா சத்யநாதன்