
சொல் புதிது, இணைய கால, 86வது கவி அரங்கம், தேதி 12.01 2024 கிழமை வெள்ளி, நேரம் மாலை 05.25 “தீர்மானம் அமுல்” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
கலந்து யோசிக்கப் பலர்
அங்கே இருக்கலாம்
முடிவெடுக்க ஒருவர்
மட்டுமே போதும். 1
அது ஏற்கப் படாதபோது
பேசி தேர்வு செய்யக்
கூட்டத்தின் பெரும்பான்மை
முடிவுக்கு விட்டுவிடலாம். 2
ஒருமித்த கருத்து
பெறுவதே முக்கியம்
அந்தத் தீர்மானம் சரியாக
அமுல் படுத்தினால் வெற்றியாகும். 3
சிட்லபாக்கம்
12 01 2024 மாலை 05.25
