கலைச்செல்வி/நினைவுப் பூனை .. இப்படித்தான்


.***

நேற்றே தீர்மானித்திருந்தேன்
நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று.

மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்
கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டது
மற்றபடி அது நான் வரைந்த பூனை

இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன்

வெகுநேரமாக பசியில் சட்டத்தில் நின்றிருந்த பூனை
சட்டென்று குதித்து
வாசல் தாண்டி வாலை ஆட்டியபடி போய்விட்டது.


15.1.2023.
தாராபுரம்