
மங்களம் பொங்கட்டும்
நெய் அரிசி வெல்லாம் சேர்த்து
பொங்கலும் பொங்கட்டும்
காலமெல்லாம் காத்து விழித்திருந்த
விவசாயம் பொங்கட்டும்
விவசாயி வீட்டில
செல்வமும் தங்கட்டும்
விவசாயி சிரிப்பினில் மிதக்கட்டும்
வீடெங்கும் நல்லவர் விழிக்கட்டும்
நாடு செழிக்கட்டும்
மாதம் மும்மாரி பொழியட்டும்
ஏரி குளங்களில் நீரும் தங்கட்டும்
ந⁸ல்லதை நினைப்போம்
நல்லதைச் செய்வோம்
நல்லதே நடக்குமென
இறைவனை கைகூப்பி தொழுது
வல்லவனாய் மாறிடுவோம்
யாரிருக்கும் கொல்லோ
யாருக்கும் அஞ்சோம்
ஏழையும் பாழையும் இங்கில்லை
என்றே தினமும்
வெற்றி சங்கூதட்டும்.
