எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்


அடுப்பில்
பொங்கும் போதே
உள்ளத்தில்
பொங்குகிறது
உற்சாகப் பொங்கல்!

உதடுகள் பொங்கும்
தன்னிச்சையாக…
உள்ளம் பொங்கினால் தான்
உல்லாசப் பொங்கல்!

உள்ளமே ஓர்
அடுப்பு தானே

பல போது
அனல் பொங்கும்
சில போது
குளிர்ந்து இருக்கும்
அவ்வப்போது
நீறு பூத்த நெருப்பாயிருக்கும்!

என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்
ஓய்வில்லா உள்ளத்தில்
அன்பு பொங்குகையில்
அட்டகாசப் பொங்கல்!

அமைதி குடியேறி விடுகையில்
மௌனப் பொங்கல்!

எல்லோர்க்குமான
இன்பம் பொங்கும்
வரம் பெற்ற உள்ளத்தில்
எப்போதும் பொங்கும்
கொண்டாட்டப் பொங்கல்!

2 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்”

  1. உள்ளத்து பொங்கல்
    உற்சாகப் பொங்கல்
    உவகைப் பொங்கல்……
    உங்கள்
    கவிதைப் பொங்கல்
    அருமை….போங்கள்….

Comments are closed.