அழகியசிங்கர்/பொங்கல் இன்னும் குளிக்கவில்லை

இன்னும்
குளிக்கவில்லை
மனைவியின்
உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்
தெரு காலியாக இருந்தது

தாராளமாக ஓடிற்று
ஸ்கூட்டர்

கரும்பை
நேற்றே வாங்கி விட்டார்கள்

மனைவி
உத்தரவு கிடைத்து விட்டது
இதோ
குளிக்கப் போகிறேன்

பொங்கலோ பொங்கல்