எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடிக்கும்/ராஜாமணி

Dec .31ஆம
தேதிஉறவினர்களும், நண்பர்களும், நலம் விரும்புகி
ளிகளும் என் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை சொல்லி கூடவே புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்லுவார்கள்.
இந்த முறை என் அலைபேசி அழைப்புகளை நான் ஏற்கவில்லை .

டிசம்பர் 31 காலை அன்று , தந்தைக்குப் பிறகு தந்தையாக மதித்த, எனது மாமனார் , (திரு. K.S இராமமூர்த்தி aged 90 yrs) ஆலமரம் விருட்சமாகி விழுதுகள் வேர்விட்டபின் ஆணிவேர் விடைபெற்று மண்ணில் மறைவதுபோல ,சட்டென்று மறைந்தார்.

எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடித்தமான செயல்.
காலம் எவ்வளவு மா றி இருக்கிறது. அவர்கள் எவ்வளவு சவால்களை வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள் என்ப தை அறியமுடியும்.
பல படிப்பினைகளையும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவையும் புரிய வைக்கும் என்பது எனது கருத்து .

கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி எங்களுக்குள் கிடையாது.

வறுமை கொடுமை, அதனி னும் கொடுமை பெற்றோர்களையும் இழந்து மற்றவர்கள் தயவில் வாழ்க்கையை தொடங்குவது.
பல சங்கடங்களையும், கசப்பான அனுபவங்களையும், அவமானங்களையும் சந்தித்தே தான் வாழ்ந்திருக்கிறார்.
மிக சுருக்கமாக பேசுவார் .ஆனால் நேர்த்தியாக பேசுவார்.
( சின்ன சின்ன பொருள்களை கூட அவருடைய பொருள்களை குறிப்பிட்ட இடத்தில் வைத்து கொள்வது ஆச்சரியமான, நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் . அவருடைய வெளிப்படைத்தன்மை , குழந்தைகளை வளர்த்த விதம் ,எல்லாம் ஒரு பாடம்.
அவர் கண்களில் கண்ணீரை மூன்று முக்கியமான நபர்களின்/மனிதர்களின் மரணத்தில் தான் பார்த்திருக்கிறேன்.

என் தாயார் இறந்த பிறகு என் தந்தையார் என் மாமனா ரை பிரதர் என்று தான் அழைப்பார். இருவருக்கும் ஆன நெருக்கம் கொஞ்சம் ஆச்சரியப்படவைத்த ,மகிழ்ச்சியைத் தந்த உறவு .
அவர் வறுமையை அறிந்தவர் / பார்த்தவர். கூடவே வாழ்வின் அருமையும் உணர்ந்தவர் .

அறிவுரைகள் சொன்னதில்லை. மாறாக வாழ்ந்து காட்டியவர். வாழ்க்கையே செய்திதான்.

அதனால் தான் அடுத்தடுத்த தலைமுறை கல்வியிலும் , பொருளாதாரத்திலும் பல முன்னேற்றங்களை கண்ட பொழுதும், நல்ல மனிதர்களாகவும் இருக்க முடிகிறது.அவருக்கும் மகிழ்ச்சி தான்.
அவருடைய விழிகள் விண்மீன்கள் வரை பார்க்கும் சூழல், ஆனால் அவருடைய கால்கள் எப்போதுமே தரையில் அழுத்தமாக பதிந்திருக்கும்.

பாதைகளற்ற கரடு முரடான வாழ்க்கை என்னும் நிலத்தில் சுவடிகளை பதித்து பயணித்தவர் .
அந்த சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றையடிப் பாதையாகி ,அவருடைய வாரிசுகள் காலத்தில் கொஞ்சம் நல்ல பாதையாகி, இன்று விசாலமான சாலையாக மாறி உலகம் முழுவதும் நீண்டு விட்டது.

உலகத்தையே அந்த பெரிய நீண்டு செல்லும் அந்த பாதைக்கு அவர் போட்ட சுவடுகள் கண்ணுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் .
அந்த அனுபவமும் நல்ல விஷயங்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் என்று நம்பிக்கை இருக்கிறது.
மாமியார் மற்றும் தாயார் மரணத்தில் எங்கோ ஒரு புள்ளியில் ஏதோ ஏமாந்து போய்விட்டதாக ஒரு உணர்வு இன்று வரை இருக்கிறது.

என் மாமனார் மரணத்தில் ஏமாந்து போனதாக உணர்வு இல்லை, என்றாலும் பெரிதாக இழந்ததாக உணர்வு இருக்கிறது .
நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவரின் விடைபெறுதலை மிக்க வலியுடன்தான் உணர முடிகிறது.
Though it is a peaceful departure,but it is very painful to say goodbye. பெற்றோர் மாமானார் மாமியார் …. வயதானவர்களின் மறைவு நமது வயதை கட்டிவிடுகிறது.