சுரேஷ் ராஜகோபால்/”கனவிலே கரும்புத் தோட்டம்”

கனவிலே கரும்புத் தோட்டம்
போட்டு ரசித்தேன்
இனிமையாக இருந்தது
கனவிலும் கரும்பு இனிக்கும் தானே . 1

எல்லோருக்கும் கரும்பு பிடிக்கும்
அதனை வெட்டி எடுத்து
துண்டுகளைக் கடித்து சாற்றினை ருசித்து
பின்பு கடித்தது துப்பவேண்டும். 2

கரும்பை நினைத்தாலே வாயூரும்
கடித்துச் சுவைத்தால் சொல்லி மாளாது
கடித்தால் பல்லுருதி பெரும்
பொங்கலுக்குப் பொங்கல் அங்கம் வகிக்கும். 3

அந்த நினைப்பே ருசிக்கிறது
வருடத்துக்கொரு முறைதான்
அந்த பாக்கியம் கிட்டும்
தவறாமல் ருசிக்கவேண்டும். 4

வருடம் ஒருமுறை காக்க முடியாதவர்கள்
கனவிலே தோட்டம் போட்டுப்
பயிர் வளர்த்து, வெட்டி
கடித்துச் சுவைத்து மகிழலாமே. 5

சிட்லபாக்கம்
18/01/2024 மாலை 05.10