
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
வெள்ளிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
ஒன்று
பொங்கல் கவிதை
கமலக் குளம் வெட்டி வைச்சேன்;
கமலன் வந்தானென்று.
அமலனும் வந்தாச்சு
கமலமும் பூத்தாச்சு.
அரசி வருவாளென்று அல்லிக்குளம் வெட்டி வைச்சேன்
அம்பாரி மேலே
அரசியும் வந்தாச்சு.
குளத்துக் கரையிலே
பள்ளம் தோண்டியாச்சு,
களி மண்ணு குழைச்சு வைச்சு
புது அடுப்பு வனைஞ்சாச்சு.
புதுப்பானை கழுத்திலே,
மஞ்சள் தாலி கட்டியாச்சு.
புத்தரிசி களைஞ்சு,
பாலோடு இட்டாச்சு.
பாலரசி பொங்கியாச்சு;
குழைந்து வெந்தாச்சு;
ஏலம் வெல்லம் சேத்தாச்சு.
வெண்பொங்கலும் ஆக்கியாச்சு.
பக்குவமா சர்க்கரை
பொங்கல் பொங்கியாச்சு.
சங்கடங்கள் தீர்ந்தாச்சு.
கட்டுக்கரும்புடன்,
குலைவாழை,பூசணி;
இஞ்சி மஞ்சள் நாற்று, நெல்லுக்கட்டு;
சூரியனுக்கு படைச்சாச்சு.
சுற்றத்தோடு
உண்டாச்சு.
மங்கலங்கள் தங்கியாச்சு.
பொங்கும் இன்பம்
நிலைச்சாச்சு
“மங்கா புகழ் என்றும்
உனக்கு” என அம்மையும்
சொல்லியாச்சு.
14-1-2024
