போர்ஹெஸ்/இரவின் வரலாறு



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


தலைமுறைகள் தலைமுறைகளாக
மனிதர்கள் இரவினைக் கட்டினார்கள்
ஆதியில் அது குருட்டுத்தன்மையும் தூக்கமுமாய் இருந்தது
மூடப்பட்டிராத பாதத்தினைக் கிழிக்கும் முட்களாகவும்
ஓநாய்களுக்கான பயமாகவும்.
இரண்டு அந்திகளைப் பிரிக்கும்
நிழலின் இடைவெளிக்குப் பெயராக
ஒரு சொல்லை யார் கூட்டினார் என
நாம் என்றும் அறியப்போவதில்லை.
எந்த நூற்றாண்டில் அது நட்சத்திரங்களுக்கு
இடையிலுள்ள மறைக்குறியீடாக நின்றது என்பதை
நாம் ஒருபோதும் அறியப்போவதில்லை.
மற்ற மனிதர்கள் அதன் புராணக்கதையை தோற்றுவித்தார்கள்.
ஊழ்வினையை நெய்யும்
அமைதியான விதிகளின் தாயாக அதை ஆக்கிய அவர்கள்
கறுப்பு ஆடுகளை அதற்கு பலியிட்டார்கள்
தன் முடிவை முன்கூட்டியே கூறும் சேவலையும்.
சால்டியர்கள்* அதற்கு பன்னிரெண்டு வீடுகளையும்
முடிவற்ற உலகங்களையும் வாயிற்கதவத்தையும் கொடுத்தார்கள்.
லத்தீனின் அறு சீர் அதற்கு வடிவத்தையும்
பாஸ்கலின்* பேரச்சத்தையும் கொடுத்தது
லூயி த லியோன்* அதில் தன்னுடைய
அதிர்ச்சியுறும் ஆத்மாவின் தந்தைநாட்டைப் பார்த்தார்.
இப்போது நாம் தொன்மையான ரசம் போல
தீரவே தீராததாய் அதை உணர்கிறோம்.
சமநிலை இழக்கும் தலைசுற்றலன்றி இன்று அதைப்பற்றி
யாரும் கூர்ந்து சிந்திக்க முடியாது.
காலம் இரவை நிலைபேறுடையதாய் பொறுப்பேற்கவைத்திருக்கிறது.

ஆனால் அது கண்கள் எனும் நிச்சயமற்ற கருவிகள் இல்லாவிட்டால்
அது உளதாயிருக்காது என எண்ணும்போது…
—-
*Chaldeans- ancient people who lived in Chaldea c.800 BC and ruled Babylonia 625–539 BC. They were renowned as astronomers and astrologers.
*Pascal- Blaise Pascal- (1623–62), French mathematician, physicist, and religious philosopher. He founded the theory of probabilities and developed a forerunner of integral calculus, but is best known for deriving the principle that the pressure of a fluid at rest is transmitted equally in all directions. His Lettres Provinciales (1656–7) and Pensées (1670) argue for his Jansenist Christianity.

  • Fray Luis de León- Spanish theologian and a writer ( 1527 to 1591).