ராமகிருஷ்ணன் தியாகராஜன்/கிடைத்தது மோதிரம்!

கீழே உள்ள படத்தின் இடது பக்கத்திலுள்ள மோதிரத்தை நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன். அம்மோதிரத்திலுள்ள கல்லை கொடுத்தவர் யாகவா முனிவர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன். கையிலிருந்து நழுவி விழுந்துவிட்டது. அம்மோதிரம் காணவில்லை என்பதை பெங்களூர் இரயில்வே நிலையத்தில்தான் கவனித்தேன். அப்பொழுதே அங்கே தேடினேன். கிடைக்கவில்லை.

எங்கோ தொலைந்து விட்டது என்பதால், முனிவர் கொடுத்த மற்றொரு கல் இருக்கிறது என மனைவி கூற இன்னமொரு மோதிரம் செய்துகொள்ள எனது குடும்பத்திற்கு பல்லாண்டுகளாக தெரிந்த ஒரு நகைக்கடையில் கூற அவர்களும் ஒரு மோதிரத்தை ஏற்பாடு செய்து, அதையும் சுமார் ஒன்றரை மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன். முனிவர் கற்களை கொடுத்தபொழுது, மோதிரம் தங்க மோதிரமாக இருக்கவேண்டும் என்பதை கட்டாயமாக கூறிவிட்டார். அதனால், இதுவும் தங்க மோதிரம்.

இன்று காலை எனது புத்தக அலமாரியின் மீது – அப்பா பயன்படுத்தி வந்த, ஆறு அடிக்கு மேலாக இருக்கும் மர அலமாரி – எந்த மோதிரம் காணவில்லை என இத்தனை நாட்களாக நான் நினைத்து வந்தேனோ அது அங்கே இருந்தது. ஆகவே, ஜனவரி 22, 2024 எனக்கு முக்கியமான நாளாக மாறிவிட்டது.