
சொல் புதிது, இணைய கால, 98வது கவி அரங்கம், தேதி 24.01 2024 கிழமை புதன், நேரம் மாலை 05.45 “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
வாழ்க்கை வாழ்வதற்கே
இளமையின் வாழ்வில் செய்த
பிழைகளுக்குப் பிற்காலத்தில்
பதில் சொல்ல வேண்டியது
கட்டாயம் வரும். 1
மனதில் மட்டுமே பதில் இல்லை
உடலிலே சுருக்கமாக மாறும்
மற்றவர் பார்வைக்குத் தெரியும்
ஏற்க மனது தடுமாறும். 2
முதுமை வளர்சிதை மாற்றம்
புரிந்தால் ஏற்கலாம் அப்போதும்
புரியாத போது நமது
தடுமாற்றத்தில் வாழ்வே சரியும். 3
பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம்
என்ற நிலையில் பலர்
கடத்தி வருவது சரியில்லை
வாழ்க்கை வாழ்வதற்கே.. 4
சுரேஷ் ராஜகோபால்
சிட்லபாக்கம்
24 01 2024 மாலை 05.45
