
98 ஆவது இணைய காலக் கவியரங்கம்
எனது நிழல்
என்னுடன் இணைந்து
நண்பனாகத் தொடர்கிறது!
நிஜத்தின்
ஆழ்ந்த இரகசியங்களை
முழுதும் அறிந்தாலும்
மௌனமாகவே நடக்கிறது!
என்றுமே என்னிடம்
ஆர்ப்பரிப்பதில்லை!
அச்சுறுத்துவதில்லை!
நிழலின் மௌனம் கூடப்
பெருங் கதைகளை
நினைவுபடுத்துகிறது!
அடிமை போலத்
தொடர்கிறது என்னுடன்
விசுவாச நாய்க்குட்டியாக!
பல சமயம்
தொலைந்து போனாலும்
தொடர்வது நிற்பதில்லை!
வெளியுலகை மறந்து
வீட்டுக்குள் அடைபட்டாலும்
நிழலின் நினைவுகள் மட்டும்
இன்றும் தொடர்கின்றன!
