மீனாட்சி சுந்தரமூர்த்திகவிதை

இன்று மாலை வாசித்த கவிதை.

என் பணி.
மழலை வயதில் தாயவள்
முகம்
காணல்,

பிள்ளை விளையாட்டில்
பொம்மைகள்,
பள்ளி செல்ல மாறியது
பணி,
ஆசிரியர் சொல் கேட்டிட..

மற்றோர் காலமதில்
அன்னை
படுதுயர் துடைக்க வழி
தேடியது

கல்லூரிக் காலமதில்
தமிழும்
நானும் என்றானது.
கனவு
கோட்டைகள் ஆனது.
தம்பி
தங்கைகள் தடம் காண.

தந்தை அகம் குளிர
சொல்
ஒன்றே வேதம் ஆனது.
தனி
விருப்பு தூரம் போனது.

என்னவரின் துணையாக
விட்டுக்
கொடுத்தல் இல்லறம்
ஆனது.

அன்னையென ஆனபின்
தியாகம்
உதிரத்தில் உலவியது.
பணிக்களம்
புகுந்தபின் மூச்சானது
கடமை.

இத்தனை அடி வைத்தும்
இங்கு
எனக்கிட்டு இறையவன்
அனுப்பிய
பணி எதுவென்ற தேடலில்
என்மனம்.