குமரன்/சொடுக்குக்கதைகள்- 2

7) கண்டித்த ஆசிரியையிடம், எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்ன மாணவி, எந்த மருத்துவமனையில் ரகசியமாக கருச்சிதைவு செய்வார்கள் என்று ரகசியமாக விசாரிக்கிறாள்

8) ஓடும் கூட்ஸ் வண்டியில் ஏறி கரியைத்தள்ளியவன், அதை விற்று பணத்தை எண்ணும் போது போலீஸிடம் மாட்டினான். காசு கை மாறியது.

9) பழைய டூ வீலரை விற்று புதியது வாங்க நினைத்து காசு சேமித்தான். வீட்டில் குழந்தைக்கு சுகமில்லாமல் போனதில் மருத்துவமனைக்கு போயிற்று அந்தப்பணம். புதியது வாங்குவதை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்தான்

10) டே டிரெயினில் ஓர சீட் பதிவு பண்ண, அந்த இருக்கையில் அமர்ந்தான். ஒரு மூன்று பேர் குடும்பம் , இரண்டு பேர் இருக்ககைக்குப் போக முடியுமா என்று கேட்க, அங்கு போய் அமர்ந்தவுடன், அடுத்த இருக்கைக்காரர், தனது கனத்த சரீரத்துடன் வந்து அமர்ந்தார், கிட்டத்தட்ட என் தொடை மீது😢