
தானாகவே வந்தமர்ந்த
பட்டாம் பூச்சி.
மலரில் உள்ள
தேனை உண்ணும் போதே
தன் நிறங்களை
உதிர்த்து விட்டுப் பறந்தது. 1
இது தினமும்
நடக்கும் நிகழ்வு தானே
புதிதாக மலர்ந்த
மலருக்கு இது
புது வித
உணர்ச்சி களிப்பு. 2
இந்த உணர்ச்சி
மீண்டும் மீண்டும்
கிடைக்குமென எதிர்பார்ப்பில்
சிரித்துக் கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்,
மறுநாள் புதுமலராக அவதரிக்கும்.
