மதுவந்தி/நூறு

இன்று 26.01.24 , 75 வது குடியரசு த் திரு நாளில்,, 100 வது விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.

தானாகப் பயணிக்க
தைரியம் வந்திருக்காது.

கைகோர்த்து, மனதிசைந்து,
பாதைசெல்ல ,ஒத்த ரசனைத்
தோழமையும், வழி நடத்த தலைமையும்,
வாய்த்திராவிடில்,
மலையேறி சிகரம் தொடும்
பயணம் சாத்யப் பட்டிருக்காது.

பயண வழியெங்கும்
நடுநடுவே நின்று,
வண்ண மலர்கள்
பறவைகளின் கீதம்,
சலசலத்தோடும் ஆற்றுநீரில்

திளைப்பு என
கொண்டாட்டமும், குதூகலமுமாய்,
புன்னகையும், மனமகிழ்வுமாய்,
கடந்த பின்னர்,
சிகரம் தொட்ட வேளை
பரவச அனுபவம்.

திரும்பி பார்த்தால்,
கடந்து வந்த தூரம்,
ஏறி வந்த உயரம்,
அடைந்த சிகரம்,
பிரமிப்பாக இருந்தது.

கொடி நாட்டி,
கொண்டாடி,
கைகொட்டி,
சுய படங்கள் சொடுக்கி,
ஆசுவாசமாய் அமர்ந்த வேளை.

அடைய இன்னும்
உண்டு சிகரங்கள்.
தொடருணும் பயணம்
எனக் கேட்ட போது,
இசைந்த மனதும்
இணைந்த கைகளும்
சேர்ந்த பயணத்தில்
அதுவும் சாத்யமெனவே
தோன்றுகிறது.

One Comment on “மதுவந்தி/நூறு”

Comments are closed.