
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
வெள்ளிக்கிழமை
சொல் புதிது
மாலை மணி 5.15
கவிதையின் தலைப்பு
வரப்பு உயர, நீர் உயர,
கதிர் உயர, கோனார் உயர,
அவன் கோமகன் உயர,
கோதையுடன் குமரன் உயர,
குலம் உயர, குடி உயர,
ஊர் உயர, நகர் உயர,
பார் வியக்க நாம் உயர,
நலமாய் நாடு உயர,
நாடு காக்க, பீடு மிகு
கூர் கொண்ட கனிவான
தலைவனை நேசமாய்
தெரிவு செய்.
வலிமை சேர் அவனுக்கு.
தேசம் காத்து,
நாம் உயர்வோம்; இன்று.
26-1-2024
