
இணையக் கால சொல் புதிது கவியரங்கம் – 100
கேள்விகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
சிலை செதுக்குவது
கலையெனில் மனிதர்கள்
கேள்வி கேட்பதும்
ஒரு கலைதான்.
சிறுவன் கேள்வியில்
துடிப்பு இருக்கும்
நடிப்பு இருக்காது
பட்டென்று கேள்வி
கேட்பான் பயமில்லாமல்.
இளைஞர் கேள்வியில்
கேலி கிண்டல் விளையாடும்
நினைத்துப் பார்த்தால்
ஆயிரம் அர்த்தம் இருக்கும்
இளங்கன்று பயமறியாது !இணைய
பெரியவர் கேள்வியில்
பந்தம் சொந்தம்
ஒட்டி உறவாடும்
எண்ணிப் பார்த்தால்
வாழ்வியல் இருக்கும்!
பெண்ணின் கேள்வியில்
மென்மை விளையாடும்
தாய்மை கொஞ்சும்
காதல் உறவாடும்
பொறுமை பூக்கும்!
முதியவர் கேள்வியில்
முதிர்ச்சி தெரியும்
அனுபவம் அசைபோடும்
நினைத்துப் பார்த்தால்
மனிதநேயம் இருக்கும்!
.,
பள்ளிக்கரணை, சென்னை
