
26/1/24 அன்று நடந்த சொல் புதிதுவின் 100 ஆவது இணைய கால கவியரங்கத்தில் நான் வாசிப்பது கவிதை இது:
சீட்டு எடுத்து கொடுத்தவுடன்
திருப்தியுடன் கூண்டுக்கு திரும்பும்
ஜோசிய கிளி
அடைப்பின் கதவு திறந்திருந்தாலும்
பழக்க தோஷத்தில்
உள்ளே சுற்றும்
ஆடு
பெற்ற பட்டங்களை அலமாரியில் பூட்டி
அழகு குறிப்புப் பார்த்து அலங்கரித்துக்கொண்டு
சமையல் குறிப்பு எழுதி பரிசு வாங்கி
கணவனின் வெற்றிகளுக்கு பின்னால் நிற்கும்
பெண்
”வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1991 – 2023)” தொகுப்பு
