
அழகியசிங்கருக்கும் பங்கு கொண்ட கவிஞர்கட்கும் நூறாவது நாள் இணைய வழிக் கவியரங்க வாழ்த்துகள்
அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 100
——————-
அடிப்படி முதற்படி
அம்மாவாய் அப்பாவாய்
அடுத்தடுத்துப் பலபடிகள்
ஆசிரியராய் நட்பாய்ச்
சொந்தமாய்ப் பந்தமாய்ச்
சுமந்த பலபடிகள்
ஒவ்வொரு படியுமே
உயரே ஏற்றியதால்
வாழ்வில் உயர்ந்தபடி
வசந்தம் வந்தபடி
படிப்படியாய் ஏறியதை
எண்ணிப் பார்த்தபடி
எப்படி இப்படி
என்றபடி சிந்தித்தால்
ஏணிப் படிகளின்
தியாகம் தெரியவரும்
அன்பும் அறிய வரும்
ஆற்றல் புரியவரும்
உச்சிக்குச் சென்றபின்பு
உதறி எறிந்திடாமல்
படிபூஜை செய்து அதைப்
பாதுகாத்து வைத்திடுவோம்
——-
