
இன்று மாலை வாசித்த கவிதை.
வேற்றுமை பலவுண்டு அதிலும்
இழையோடும்
ஒற்றுமை பின்னிப் பிணைந்து.
பாலை என்றால் சோலை ஏது?
மலை
இருந்தால் வனமங்கு இருக்காது.
மழையே மலிந்திருக்கும்
வெயில்
வர வழியிராது. நடுக்கும்
குளிர் உறைந்திருக்கும்.
ஆறோடும் சமவெளி இருக்கும்
மக்கள்
மனமங்கு வறண்டிருக்கும்.
வெயில்,மழை,குளிர் எனப்
பருவமெலாம்
இதமாய் ஈந்து .உலர்ந்த பாலை
தவிர்த்து
ஜீவ நதிகளோடு, மழை பெற்று
ஊற்று
நீரால் ஓடும் நதிகளும் தந்தாய்
காடும்,மலையும், சிற்றூரும்
நகரமும்,
அமைத்து கனிம வளம் கனியச்
செய்தாய்.
இன்னல் எத்தனையோ
அடைந்த
போதும் அகதிகளாய் ஆகாமல்
உணவு,உடை,உறையுள்
நீ தந்த
பரிசல்லவோ எமக்கு
பாரதத் தாயே !.
நினைவுகள் மோதியும்
உடையாத
கரையெனும் பண்பாடு
கலந்தாய்
மண்ணில்,..
ஒவ்வாத வழக்கம் பழக்கி
எம்மவர்
இன்னல் நோக்கி ஓடுவது
கண்டு
கலங்கினாயோ?. என்றிவை
தீரும்
என்றே ஏக்கம் கொண்டனையோ
அன்னாய்…..
