ஹரணி கவிதை

வெற்றிகரமான 100 வது நாள் இணையக் காலக் கவியரங்கம்.
நாள். 31.1.24

சில
துன்பங்களைக் கடக்கிற
போது தெரிகிறது அவை
துன்பங்களே இல்லையென்று…

நாளை எந்தக் காய்
பழமாகுமென்று தீர்மானிப்பது
காணாமல் போய் விடுகிறது..

தவத்திலும் வரத்திலும்
நம்பிக்கையில்லை..

ஒரு துளியில்தான் பிரும்மத்தின் விதைகள்
விதிக்கப்படுகின்றன.
துளிர்த்து முழு உருவம் கண்ட பின்னரே தெரிகிறது..

பெரும்பாலான தருணங்களில்
தாயம் உருட்டு கையில் தவறாது பாம்பு கடித்துக்
கீழிறங்கி விடுகிறது..

விடமாயினும் இருக்கவே
இருக்கிறது அதனாலும் தவிர்க்கப்பட்ட வாழக்கை
பெரும்பான்மையோருக்கு…