ஹரணி/சொடுக்குக் கதைகள் (3)


000
(1)
அறுபது வயதுக்கு மேல் விவாகரத்து கேக்கறீங்க? நீதிபதி கேட்டார். பிடிக்கலேங்கறதுக்கு வயது இல்லை என்றாள் கெளரி.

000
(2)
இந்தா மூன்று கோடரியும் உன் நேர்மைக்குப் பரிசு என்றார் கடவுள்.
வேண்டாம் என் கோடரி போதும்.
ஏன்?
என்னால தங்கத்துக்கும் வெள்ளி க்கும் ஜிஎஸ்டி கட்ட முடியாது.

(3)

சட்டென்று விலகிடத் தப்பித்தார் பைக்காரனிடமிருந்து.
நடக்க ஆரம்பித்தார்.
என்ன சார் திட்டாமப் போறீங்க. என் தப்புதான் என்றான் பைக்காரன்.
தப்புன்னு உனக்கு தெரியுது இனிமே செய்யமாட்டே அதனால திட்டலே.

(5)

வயிறு மந்தமாக பசிக்காமல் இருந்தது.
தோட்டத்துச் செடி யெல்லாம் காஞ்சு கிடக்கு என்றாள் மனைவி.
விறுவிறு என்று தண்ணீர் ஊற்றி முடித்தான்.
கபகபவென்று பசிக்க ஆரம்பித்தது இவனுக்கு.

ஹரணி