அழகியசிங்கர்/காலியான இருக்கை

கூட்டம் ஆரம்பிக்கும் முன்
வந்துவிட்டேன்
காலியான
இருக்கைகள்
தென்பட்டன

நான்
ஒரு புன்னகையை
சிந்தினேன்

இருக்கைகளும்
புன்னகைத்தன

வழக்கமானதுதான்
இது என்றேன்
ஆமாம் ஆமாம்
என்றன.

நீங்கள்
எதாவது பேசினால்
நான்
மகிழ்ச்சி அடைவேன்
என்றேன்

நாங்கள்
பேசுவதில்லை
ஆனால்
கேட்டு கேட்டு
சோர்ந்து போய்விடுகிறோம்
என்றன

One Comment on “அழகியசிங்கர்/காலியான இருக்கை”

Comments are closed.