
உணர்வுகளின் பூங்கொத்தாகக்
கவிதையொன்று படைக்கிறேன்!
அன்பும் காதலும் நட்பும் பரிவும்
பாசமும் நேசமும் கருணையும்
பெண்மையும் தாய்மையும்
பெருமையும் சிறுமையும்
கடமையும் கற்பனையும்
கலந்து வண்ணம் தீட்டுகிறேன்!
சித்திரங்களாய்க் கவிதைகள் தீட்ட
மனதில் எண்ணங்கள் ஊறுகின்றன!
எழுதும் ஆசை அடங்குவதேயில்லை!
கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளாக
சிந்தையில் விந்தைகள் படைக்கும்
கவிதைகளின் சலசலப்பு ஓசை
மனதிற்கு உற்சாகமூட்டுகின்றன!
கவிதைகளே உயிர்மூச்சாக
சுவாசித்து வாழ்ந்திருப்போம்!
சுவாசம் நிற்கும் வரை
இனிய கவிதைகள் தொடரட்டும்!
28/01/2024
