வேணு.ஜெயராமன்/கைம்பெண்ணோ! இவள்…..


*
கன்னித் தமிழ்ப் பெண்ணின்
கனவுகளைக் காலன் கொன்றதோ?
தரணியில் இல்லம் ஆண்டவள்
தலைவனோடுக் கைக் கோர்த்து……

இல்லறம் எனும் சோலையில்
இல்லை என்று சொல்லாத…..
இல்லத்து அரசியாக வாழ்ந்தவள்
இருள் நீக்கி ஒளி தந்தவள்….

இணைந்த கைகள் என்னானதோ
இருந்தது போதும் நினைத்தானோ?….
இன்னல் நிறைந்த வாழ்க்கையில்
இனி என் செய்வது என்று கவலை….

இளமையில் கொண்டவனை இழப்பு
இவ்வுலகத்தின் பார்வையில் இனி?…..
ஒன்றில் ஒன்று பிரிந்து விட்டால்
ஓராயிரம் துன்பம் இணைந்திடுமே……

இளமையின் சோலைக் கனவுகள்
இழந்ததை அசை போடுகிறது……
எதனைச் சொல்லி மனம் மாறும்
எது சொன்னாலும் ஏற்க மறுக்கும்…..

உள்ளத்தில் இருப்பதைச் சொல்ல
உலகில் அவனின்றி துணையேது!……
உயிரோடு உயிர் கலந்த உறவில்
உருவான உயிருக்கு காவலாக…..

எப்படி இருந்தாலும் வாழ்வதற்கு
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்……
அப்படியான மனதைப் பேற வழி ஏது?
இந்தப் பேதையின் மனதிற்கு ஆறுதல்
கிட்டட்டும்……..

அன்புடன் ,
வேணு.ஜெயராமன்.

One Comment on “வேணு.ஜெயராமன்/கைம்பெண்ணோ! இவள்…..”

  1. பெரியாரின் சீர்திருத்தங்கள் மக்களால் எற்றுக் கொள்ளப்பட்ட பின் கைம்பெண்கள் மறுமணம் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டனர்.
    அவரே முன்னின்று நடத்தி வைத்த இராஜாஜியின் விதவை மகள் லட்சுமிக்கும் காந்தியின் மகனுக்கும்

Comments are closed.